உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம்

தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம்

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வாழ்ந்துகாட்டுவோம் திட்டம் சார்பில், தகுதிவாய்ந்த பெண் தொழில் முனைவோர்களை தேர்வு செய்யும் முகாம் அந்தந்த வட்டார இயக்க மேலாண்மை அலுவலகங்களில் நவ. 4 முதல் நடக்கிறது. மகளிர் குழுவில் 2 ஆண்டுகள் உறுப்பினராக உள்ளவர்கள், வங்கி கடன் பெற்று திரும்ப செலுத்திய அனுபவம் பெற்ற 18 முதல் 55 வயதுடைய அனைத்து பெண்களும் பயன்பெறும் வகையில் 2 சதவீதம் வட்டி மானியத்துடன் தொழில் கடன் வழங்கப்படும். நவ. 4 - விருதுநகர், நவ. 5 - சிவகாசி, நவ. 7 - காரியாபட்டி, நவ. 11 - ராஜபாளையம் பகுதிகளில் முகாம்கள் நடக்கிறது. விருப்பமுள்ள பெண் தொழில் முனைவோர்கள் பங்கேற்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ