உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கடின உழைப்பு, விடாமுயற்சிகொண்டால் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு அறிவுரை

கடின உழைப்பு, விடாமுயற்சிகொண்டால் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு அறிவுரை

சிவகாசி : கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டால் போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம், என முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி போட்டி தேர்வுகள் மையம் மற்றும் மதுரை ராஜா கே.எஸ்.பி., கணேசன் அகாடமி சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளுக்கான விழிப்புணர்வு, வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். போட்டி தேர்வுகள் மையம் உதவி ஒருங்கிணைப்பாளர் பாலாஜி வரவேற்றார். மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி உதவி பேராசிரியர் மணிமாறன் வாழ்த்தினார்.முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது: மத்திய, மாநில அரசு பணிகள் அனைத்தும் போட்டி தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு பணி நியமனம் செய்யப்படுகிறது.இத்தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் கல்லுாரி பருவத்தில் இருந்தே தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், பொது அறிவு, பொருளாதாரம், வரலாறு, அறிவியல், உளவியல், விளையாட்டு என அனைத்து விவரங்களையும் அறிந்திருக்க வேண்டும். போட்டித் தேர்வுகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும்.கடின உழைப்பு, விடாமுயற்சி தன்னம்பிக்கை ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டால் போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறலாம், என்றார். போட்டித் தேர்வுகள் மையம் ஒருங்கிணைப்பாளர் மூவேந்தன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை