உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 11 தள்ளுவண்டிகளை வழங்க எதிர்பார்ப்பு

11 தள்ளுவண்டிகளை வழங்க எதிர்பார்ப்பு

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் நடைபாதையோர வியாபாரிகளுக்கு 11 தள்ளுவண்டிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என விருதுநகர் நடைபாதையோர வியாபாரிகள் வாழ்வாதார பொது நலச்சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது.விருதுநகர் நகராட்சி பகுதிகளில் உள்ள நடைபாதையோர வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 2023 ஆக. 11 தள்ளுவண்டிகள் வந்துள்ளது. ஆனால் இந்த தள்ளுவண்டிகள் நடை பாதையோர வியாபாரிகளுக்கு இது வரை வழங்கப்படவில்லை. இது குறித்து நகராட்சி சேர்மன் மாதவன், ஆணையாளர் லீனா சைமனிடம் பல முறை வலியுறுத்தியும் எவ்வித பயனும் இல்லை. முன்னுரிமை அடிப்படையில் நடைபாதையோர வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை