உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் இருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசிக்கு டவுன் பஸ் இயக்க எதிர்பார்ப்பு

சாத்துாரில் இருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசிக்கு டவுன் பஸ் இயக்க எதிர்பார்ப்பு

சாத்துார்:சாத்துாரில் இருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசிக்கு டவுன் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாத்துார் இரவார்பட்டி சேதுராமலிங்கபுரம் சுப்பிரமணியபுரம் தாயில்பட்டி மடத்துப்பட்டியில் இருந்து தினமும் ஏராளமானோர் சிவகாசி பள்ளிகள் கல்லுாரிகளுக்கும் அச்சகங்களிலும் பட்டாசு கடைகளிலும் பணிபுரிய செல்கின்றனர்.சாத்துாரில் இருந்து காலை 8:00 மணிக்கு தனியார் பஸ்கள் தாயில்பட்டி வழியாக சிவகாசிக்கு செல்கின்றன. இதனால் காலையில் தனியார் பஸ்ஸில் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிப்படும் நிலை உள்ளது.மேலும் இரவார் பட்டி சேதுராமலிங்கபுரம் பகுதி வசிப்பவர்கள் மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் நடந்து வந்து பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது. பெரும்பாலும் பெண்கள் நடந்து வந்து பஸ் ஏறி செல்கின்றனர்.இருந்த போதும் உரிய நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாமல் பெண் தொழிலாளர்கள் அவதிப்படும் நிலை உள்ளது. மேலும் கல்லுாரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பஸ் வசதி இன்றி தவிக்கும் நிலை உள்ளது.எனவே சாத்துாரில் இருந்து காலை 7:00 மணிக்கு கிளம்பி இரவார்பட்டி சேகராமலிங்கபுரம், சுப்பிரமணியபுரம், பூசாரி நாயக்கன்பட்டி, தாயில்பட்டி வழியாக சிவகாசிக்கு அரசு டவுன் பஸ் இயக்குவதன் மூலம் பலர் பயனடைவர். எனவே மாவட்ட நிர்வாகம் சாத்துாரில் இருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசிக்கு டவுன் பஸ் இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை