உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அரசு மானிய விலையில் தரமான விதைகள் வழங்க எதிர்பார்ப்பு

 அரசு மானிய விலையில் தரமான விதைகள் வழங்க எதிர்பார்ப்பு

அருப்புக்கோட்டை: -அரசு தரமான இடு பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. சோளம், பருத்தி, உளுந்து, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களுக்கு விதைகள் மானியத்தில் அந்தந்த வேளாண் துறை அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. மானியத்திற்கான கோடிக்கணக்கான ரூபாய்களை அரசு ஒதுக்குகிறது. அரசு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து விதைகளை வழங்குகிறது. ஒரு கிலோ விதை 100 ரூபாய் என்றால் அதை அரசு 150 ரூபாய்க்கு வாங்கி, விவசாயிகளுக்கு 200 ரூபாய்க்கு விற்கிறது. அதில் 100 ரூபாய் மானியம் தரப்படுகிறது. இதில் வழங்கப்படும் பொருட்களில் தரம் இல்லை. தனியார் நிறுவனங்களில் மூலம் விற்கப்படும் சூரியகாந்தி 1 கிலோ ஆயிரத்து 600 விற்கப்படுகிறது. இதில் தரம் உள்ளது. விலை அதிகமானாலும் தனியார் நிறுவன விதைகளை வாங்கி பயன்படுத்துவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அரசு மானிய விலையில் சூரியகாந்தி விதைகளை தருகிறது. இதில் தரம் குறைவாக இருப்பதால் விதைத்தும் பயிர்கள் முளைப்பதில்லை. என விவசாயிகள் புலம்புகின்றனர். மானியத்தில் தரமான விதைகளை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து சங்கர பாண்டியன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்: வடக்குநத்தம், பரளச்சி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் அரச மானியத்தில் வாங்கி விதைத்த விதைகள் சரியாக முளைக்கவில்லை. சூரியகாந்தி விதையில் பாதி இந்த கீரை செடி விதைகள் கலந்து உள்ளது. அரசு மானியத்திற்கு என ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதியை நேரடியாக ஒவ்வொரு விவசாயியின் கணக்கில் ஏக்கர் மற்றும் பயிர்களுக்கு தகுந்தாற் போல் ஊக்க தொகையாக வழங்கினால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை