எரிச்சநத்தம் பள்ளியில் சிதிலமடைந்த சுற்றுச்சுவர் சீரமைக்க எதிர்பார்ப்பு
விருதுநகர்: விருதுநகர் அருகே எரிச்சநத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும். விருதுநகர் அருகே எரிச்ச நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தான் இந்த ஊராட்சியின் துவக்கப்பள்ளி குழந்தைகள் அதிகம் படிக்கின்றனர். இதன் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து சேதம் அடைந்துள்ளது. இதன் சுவற்றின் பூச்சுக்கள் பெயர்ந்து செங்கல்கள் தெரியும் நிலை உள்ளது. அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையிலானது பள்ளியின் சுவர்களை மராமரத்து செய்ய வேண்டும் அல்லது பள்ளி திறக்கும் முன் பேட்ஜ் பணிகளாவது செய்ய வேண்டும். திருநெல்வேலியில் கழிப்பறை சேதத்தால் தான் மாணவர்கள் பலியான சம்பவம் நடந்தது. சமீபத்தில் திருவள்ளூரில் சுற்றுச்சுவர் சாய்ந்து மாணவர் பலியானார். இந்நிலையில் இப்பள்ளியிலும் சுவர்கள் பலவீனமாக உள்ளது பெற்றோர் மனதை பதைபதைக்க செய்ய வைக்கிறது. பள்ளிக்கல்வித்துறை யும், ஊரக வளர்ச்சி முகமை யும் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கழிப்பறை கட்டடத்தை புனரமைக்க வேண்டும்.