உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 10 பேர் பலி

விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 10 பேர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே நடந்த வெடிவிபத்தில் 910பேர் உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eg9xvp4n&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. மீட்புப்பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

இ.பி.எஸ்., இரங்கல்

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன். தமிழகம் முழுவதும் செயல்படும் பட்டாசு ஆலைகள் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றுகிறதா? என்பதை தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை