உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீட்டுச்சுவர் இடிந்து சேதம் உயிர் தப்பிய குடும்பம்

வீட்டுச்சுவர் இடிந்து சேதம் உயிர் தப்பிய குடும்பம்

நரிக்குடி: நரிக்குடியில் கன மழைக்கு வீட்டு சுவர் இடிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. நரிக்குடி தவுலத் 45,க்கு சொந்தமான வீடு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் உள்ளது. தவுலத் வெளியூரில் வேலை பார்க்கிறார். மனைவி நுார்ஜகான் 2 குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசிக்கிறார். நரிக்குடியில் சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. குழந்தைகளுடன் தனியாக இருக்க பயந்து, அருகில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை ஒரு மணி நேரமாக நீடித்தது. மழைக்கு வீட்டு மண் சுவர்கள் ஈரமடைந்து தாக்குப் பிடிக்க முடியாமல் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த பாத்திரங்கள், பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் சேதம் அடைந்தன. குடும்பத்தினர் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !