மேலும் செய்திகள்
கலசலிங்கம் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
9 minutes ago
டிச.11க்குள் எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் சமர்பிக்கலாம்
18 minutes ago
ரூ.50 ஆயிரம் லஞ்சம்: பொறியாளர் கைது
3 hour(s) ago
சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணை 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 27 அடி உயரம் கொண்ட அணையில் 9 மதகுகள் உள்ளது. திருத்தங்கல், செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வடமலாபுரம், முதலிப்பட்டி, வாடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3003 ஹெக்டர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி உள்ளது. இதனை நம்பி நெல், வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு ஹெக்டர் பாசன வசதி கூட இல்லை. மேலும் விருதுநகர், திருத்தங்கல் நகரங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் எவ்வளவு மழை பெய்தாலும் இதுவரையிலும் அணை நிரம்பியது இல்லை. மழையால் தண்ணீர் வந்தவுடன் மதகுகளில் ஷட்டர் பழுதால் தண்ணீர் வீணாக வெளியேறிவிடும். மேலும் அணை பலவீனமாக இருப்பதால் கடந்த காலங்களில் 18 அடி உயரம் வரை தண்ணீர் வந்ததும் அதனை தேக்க முடியாமல் அணையின் பாதுகாப்பு கருதி வீணாக வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் ரூ. 28 கோடி ஒதுக்கப்பட்டு புதிய ஷட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தும் அணைக்கு தண்ணீர் வரவில்லை. புதிய ஷட்டர்கள் அமைத்துள்ள நிலையில் தேங்கிய சிறிதளவு தண்ணீரும் வெளியேறவில்லை. மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை, பிளவக்கல் உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வந்த நிலையில் ஆனைக்குட்டம் அணைக்கு மட்டும் தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே அடுத்த மழைக்காலங்களில் அணைக்கு தண்ணீர் வந்து நிரம்ப வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். சிவகாசி, டிச. 5-- மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தும் புதிய ஷட்டர்கள் அமைக்கப்பட்டும் ஆனைக்குட்டம் அணைக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
9 minutes ago
18 minutes ago
3 hour(s) ago