கரும்பு காட்டில் தீ
நரிக்குடி : நரிக்குடி எம்.புதுக்குளத்தைச் சேர்ந்த விவசாயி ஜோதிமணி. தோட்ட விவசாயமாக கரும்பு பயிரிட்டு இருந்தார். நேற்று மதியம் கரும்பு காட்டில் தீ பற்றி எரிந்தது. திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள கரும்புகள் சேதமடைந்தன. மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்கள் என அ.முக்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.