பட்டாசு ஆலை வாட்ச்மேன் கல்லால் அடித்துக்கொலை
சாத்துார்: சாத்துார் அருகே பட்டாசு ஆலை வாட்ச்மேன் மோகன்ராஜை 52 கொலை செய்த மற்றொரு வாட்ச்மேன் கருப்பசாமியை55, போலீசார் கைது செய்தனர்.சாத்துார் அருகே குகன் பாறை - செவல்பட்டி ரோட்டில் உள்ள கீதா கிருஷணன் பட்டாசுஆலையில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் ,52. வாட்ச்மேனாக 10 ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார். நேற்று காலை 10:00 மணிக்கு தொழிலாளர்கள் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு வந்த போது பட்டாசு ஆலை வளாகத்தில் தலையில் ரத்த காயத்துடன் மோகன்ராஜ் இறந்து கிடந்தார்.போலீசார் பட்டாசு ஆலை சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதே பட்டாசு ஆலையில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வரும் குகன் பாறை கருப்பசாமி, 55, அதிகாலை 2:00 மணி அளவில் கல்லால் மோகன்ராஜ் தலையில் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. முன் விரோதம் காரணமாக கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தாக போலீசார் கூறினர்.வெம்பக்கோட்டை போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.