உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போனஸ், கூலியை உயர்த்தி வழங்க கோரி பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போனஸ், கூலியை உயர்த்தி வழங்க கோரி பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகாசி: போனஸ் , கூலியை உயர்த்தி வழங்க கோரி பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சிவகாசி தொழிலக பாதுகாப்பு சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தேவா தலைமை வகித்தார். சி. ஐ. டி. யு., மாவட்ட தலைவர் மகாலட்சுமி, பொதுச்செயலாளர் பாண்டியன், பொருளாளர் பாப்பா உமாநாத், முருகன், விஜயகுமார் முன்னிலை வகித்தனர். பீஸ் ரேட், காண்ட்ராக்ட் எக்ஸ்ட்ரா வேலை செய்வோர் உள்ளிட்ட அனைத்து பட்டாசு தொழிலாளர்களுக்கும் 30 ஆண்டுகளாக உயர்த்த படாத போனசை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த ஆண்டு தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் 30 சதவீதம் கருணை தொகை என 50 சதவீதம் வழங்க வேண்டும். அரசாணை வெளியிட்டும் இதுவரை கூலி உயர்வு வழங்காத பட்டாசு ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் உயிரை பாதுகாத்திட விதி மீறல்களை தடுத்து நிறுத்தி விபத்து இல்லாத பட்டாசு உற்பத்திக்கு வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பட்டாசு தொழிலாளர்கள், சங்கத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை