பூக்கள் விலை கடும் உயர்வு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தாலும், பெண்கள் அசராமல் பூக்களை வாங்கினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அருப்புக்கோட்டையில் நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூ.2 ஆயிரம், கனகாம்பரம் ரூ.ஆயிரத்து 500, பிச்சி ரூ.ஆயிரம், முல்லை ரூ.ஆயிரம், ரோஜா ரூ.700, செவ்வந்தி ரூ.500 என விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் பண்டிகை அன்று புத்தாடை அணிந்து, பூக்கள் சூடுவதற்காக பெண்கள் விலை உயர்ந்தாலும் அசராமல் பூக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.