உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வத்திராயிருப்பு மலையில் காட்டுத்தீ அணைப்பு

வத்திராயிருப்பு மலையில் காட்டுத்தீ அணைப்பு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு நெடுங்குளம் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயினை வனத்துறையினர் அணைத்தனர். இம்மலைப்பகுதியில் நேற்று முன் தினம் இரவு வத்திராயிருப்பு வனச்சரகம் நெடுங்குளம் பீட் 1ல் காட்டு தீ பற்றி எரிந்தது. வத்திராயிருப்பு வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் மாலை வனப்பகுதியில் பலத்த காற்றும், மின்னல் வெட்டும் ஏற்பட்டதில் தீப்பிடித்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !