மேலும் செய்திகள்
பிரச்சனையும், தீர்வும் :
25-Jan-2025
விருதுநகர்: விருதுநகர் - சிவகாசி ரோட்டில் அடிக்கடி குடிநீர் லீக் ஆகிறது. இதை குடிநீர் வடிகால் வாரியம் கண்டு கொள்ளாததால் தினசரி லிட்டர் கணக்கில் வீணாகிறது.விருதுநகர் -சிவகாசி ரோட்டில் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு அருகே தினசரி காலை 11:00 மணி உள்ளிட்ட நேரங்களில் குடிநீர் லீக் ஆகி வீணாகிறது. குழாய் உடைப்பு இருப்பது நேரடியாக தெரியாமல் உள்ளது. சிறிதளவே ரோட்டிற்கு வருகிறது. மண்ணில் புதைக்கப்பட்டுள்ள குழாயாக உள்ளது. மேலும் இந்த தண்ணீர் வீணாகி பேவர் பிளாக் உள்ளிட்ட பகுதிகளில் பரவுவதால் வாகனங்கள் சறுக்கும் அபாயமும் உள்ளது.இவ்வாறு அடிக்கடி லீக் ஆவதை சரி செய்ய வேண்டும். இது நகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய். வடிகால் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25-Jan-2025