உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருவிழா காலங்களில் அரசு புறநகர் பஸ்கள் மாயம்; சிரமத்தில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர்

திருவிழா காலங்களில் அரசு புறநகர் பஸ்கள் மாயம்; சிரமத்தில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர்

விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 450 ஊராட்சிகள் உள்ளன. கிராமங்களில் வசிக்கும் மக்கள் பல்வேறு பணிகளுக்காகவும் மாணவர்கள் மேற்படிப்புக்காகவும் அருகில் உள்ள நகர்புறத்தை நோக்கித்தான் வர வேண்டி உள்ளது. கிராமங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டிருந்த போதிலும், மாவட்டத்தில் இன்னும் பல கிராமங்களுக்கு பஸ் வசதி போதுமானதாக இல்லை. ஒரு சில கிராமங்களுக்கு காலை மாலை இரண்டு வேளைகள் மட்டும் பஸ்கள் வந்து செல்கின்றன. இன்னும் சில கிராமங்களுக்கு பஸ் வசதியே செய்து தரப்படவில்லை. இதில் முக்கியமான திருவிழாக்கள், முக்கிய கோயில்கள் விழாக்களுக்கு கூடுதல் பஸ்களை விடுவதற்காக கிராம பகுதிகளுக்கும் செல்லும் பஸ்களின் நேரத்தை குறைத்து மாற்றி விடுகின்றனர். இதனால் பஸ்கள் வராமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். திருச்சுமி அருகே இறைச்சின்னப்பட்டிக்கு பஸ் வசதி இல்லை. இங்குள்ள மக்கள், 2 கி.மீ., நடந்து சென்று எம்.ரெட்டியபட்டியில் பஸ் ஏற வேண்டி உள்ளது. பஸ் வசதி கேட்டு இப்போ ஊர் மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதேபோன்று தம்பநாயக்கன்பட்டியிலிருந்து 3 கி.மீ. தூரமுள்ள ரெட்டியபட்டிக்கு பஸ் விட கோரி பல போராட்டங்கள் செய்தும் பஸ் விடப்படவில்லை இப்போது மக்களும் நடந்து சென்று தான் அருகில் உள்ள ஊரில் பஸ் ஏற வேண்டி உள்ளது. கீழக்குருணை குளம் கிராமத்தில் காலை மாலை என வரும் பஸ்கள் சமீப காலமாக காலை மட்டும் வந்து செல்கிறது மாலை வருவது இல்லை. இது போன்று திருச்சுழி ஒன்றிய பகுதிகளில் உட்கடை கிராமங்களில் பஸ்கள் வசதி இல்லை. அரசு பஸ்களும் வந்து செல்வது இல்லை. ஒரு சில தனியார் பஸ்களில் ஏறி தங்கள் ஊருக்கு மக்கள் நடந்து செல்கின்றனர். போராட்டம், பிரச்சனை என்றாலே கிராமங்களுக்கு செல்லும் பஸ்களை நிறுத்தி விடுகின்றனர். பள்ளி கல்லூரி மாணவர்களின் நலன் கருதி குறிப்பிட்ட நேரங்களில் செல்லும் பஸ்களை கூடுதலாக இயக்கவும், கோயில் திருவிழாக்களுக்காக பஸ்களை மாற்றி விடுவதையும் அரசு போக்குவரத்து கழகம் கைவிட வேண்டும். பஸ் வசதிகள் இல்லாத கிராமங்களுக்கு பஸ்கள் வந்து செல்ல மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ