அரசு ஊழியர் சங்க கூட்டம்
விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 15வது மாவட்ட அளவிலான கூட்டம் மாவட்டத் தலைவர் பால்முருகன் தலைமையில் நடந்தது.இதில் சி.ஐ.டி.யு., மாநிலச் செயலாளர் மகாலட்சுமி, அரசு ஊழியர் சங்க மாநில துணைப்பொதுச் செயலாளர் சோமசுந்தரம், மாவட்டச் செயலாளர் கருப்பையா, பொருளாளர் முத்து வெள்ளையப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் பழைய பென்சன் திட்டம், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஊழியர்கள், ஊர்புற நுாலகர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் உள்பட பல கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.