உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரமணாஸ் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

ரமணாஸ் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.அரசின் தமிழ்நாடு, புதுச்சேரி முதன்மை லேபர் கமிஷனர் (ஓய்வு) முத்துமாணிக்கம் கலந்து கொண்டு 519 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலை அளவில் 2ம் இடம் ரேங்க் வாங்கிய 15 மாணவிகள், முதுநிலை பட்டம் பெற்ற 27 மாணவிகள், இளநிலை பட்டம் பெற்ற 477 மாணவிகள் பட்டம் பெற்றனர்.மாணவிகள் தமது பெற்றோருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்த வேண்டும். எங்கு சென்றாலும் நமது கலாச்சாரத்தையும் பெற்றோர்களையும் படித்த கல்லூரியையும் மறக்காது நன்கு செயல்பட்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார்.கல்லுாரி தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் இளங்கோவன், பி.எட்., கல்லுாரி செயலாளர் சங்கரநாராயணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் விக்னேஷ், பாரதிமுருகன், சுப்ரமணியன், கலை கல்லூரி முதல்வர் தில்லை நடராஜன், பி.எட்., கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை