உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வீதி எங்கும் பசுமை, நிழல் போர்த்தி குளிர்ச்சி-

 வீதி எங்கும் பசுமை, நிழல் போர்த்தி குளிர்ச்சி-

சுற்றுப்புற சூழல் மாசு படாமல் இருக்க மரக்கன்றுகளை அதிக இடங்களில் நட்டு அதை தொடர்ந்து பராமரிப்பது முக்கிய கடமை.நகர் பகுதி மக்கள் நெருக்கம், சாலை விரிவாக்கம், தொழிற்சாலைகள், புதிய குடியிருப்புகள் உருவாக்கம் போன்ற காரணங்களால் ஏற்கனவே உள்ள மரங்களை வெட்டி சாய்க்கின்றனர். மரங்கள் வளர்ப்பது சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதின் அவசியம் கருதி அரசு முன்னெடுப்பு செய்து தன்னார்வ குழுக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.இதன் காரணமாக நகர் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், அரசு அலுவலக வளாக வெற்றிடங்கள் கண்டறியப்பட்டு குறுங்காடுகளாக மாறி வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு பறந்து விரிந்த வளாகங்களில் இந்த முன்னெடுப்பை செய்து வருகின்றன.இந்நிலையில் தங்கள் வாழ்வியலோடு 50 வருடங்களாக குடியிருப்புகளை சுற்றி ரோட்டோரங்களில் இரண்டு பக்கமும் மரக்கன்றுகளை நட்டு பேணி காத்து வளர்ப்பதை சிவகாமிபுரம், சங்கரபாண்டியபுரம், துரைச்சாமிபுரம், தோப்புப்பட்டி தெற்கு, வைத்தியநாதபுரம் பகுதி நெசவு தொழிலாளர்கள் தங்கள் கடமையாக கொண்டுள்ளனர்.இளைஞர் சங்கத்தினரும் தங்கள் பங்குக்கு இவற்றை முன்னெடுத்து வருவதால் இப்பகுதியில் ஐந்து தெருக்களிலும் நுழைந்து வெளியேறும் போது கடும் வெயிலிலும் அடர்ந்து வளர்ந்துள்ள மரங்களால் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது.நெசவாளர்களின் கடமை ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மரம் வளர்ப்பதன் அவசியம் எங்கள் தொழிலுடன் சேர்ந்து முக்கியத்துவம் பெற்றுவிட்டது. நெசவிற்கான 'பா தொய்வது' என்ற பணியை நெருக்கமான குடியிருப்புகள் இடையே செய்ய வழி இன்றி தெருக்களில் மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதற்காக இரண்டு பக்கமும் மரங்களை வளர்த்து பேணி காப்பதால் இப் பிரச்சனை தீர்ந்தது. நெசவாளர்கள் அதிகம் குடியிருக்கும் மற்ற பகுதிகளிலும் இதே நிலைதான்.- ராமசுப்பு, சங்க உறுப்பினர்.ஆக்சிஜன் தொழிற்சாலைநகர் பகுதியில் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசினை சுவாசித்து விட்டு இப்பகுதியில் நுழையும் போது ஆக்சிஜன் தொழிற்சாலைக்குள் வந்தது போல் உற்சாகம் ஏற்படுகிறது. வெயிலிலிருந்து தப்பி குளுமையான சூழலும், கண்ணுக்கு பசுமையும் வனப்பகுதிக்குள் நுழைந்த அனுபவத்தை தந்து விடுகிறது. மரங்கள் பட்டுப்போனாலும் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை வழி வழியாக இளைஞர்களும் பின்பற்றுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.- சிவசங்கர், குடியிருப்பாளர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை