நாளை மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான குறைதீர் கூட்டம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நாளை(மே 17) நடக்க உள்ளது.கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை கல்லுாரி, தொழிற்பயிற்சி கல்வியில் சேர்வது தொடர்பான சிறப்பு குறைதீர் கூட்டம் மே 17 மதியம் 3:00 மணிக்கு நடக்கிறது. இதில் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லுாரியில் சேர இயலாத மாணவர்கள் பங்கு பெறலாம்.2025--26 கல்வியாண்டு மட்டுமல்லாது அதற்கு முந்தைய கல்வியாண்டுகளிலும் பயின்று கல்லுாரியில் சேராத மாணவர்களும் இக்குறைத்தீர் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக கல்லுாரியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். உயர்கல்வியில் சேர்வதற்கான சந்தேகங்கள், கோரிக்கைகள் குறித்த தகவல்களை பங்கேற்று பயனடையலாம், என்றார்.