உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான சுகாதார வளாகம்

பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமான சுகாதார வளாகம்

திருச்சுழி: திருச்சுழி அருகே பயன்பாட்டிற்கு வராமலேயே ரூ.5.25 லட்சத்தில் கட்டிய சமுதாய சுகாதார வளாகம் சேதமடைந்த நிலையில் உள்ளது. திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது புல்லாநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு மக்களின் பயன்பாட்டிற்கு கழிப்பறை வசதி இல்லாததால் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தி வந்தனர். தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் 2021 ல், சமுதாய சுகாதார வளாகம் 5.25 லட்சம் நிதியில் கட்டப்பட்டது.கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் மக்களின் பயன்பாட்டிற்கு வராமலேயே கட்டடம் சேதம் அடைந்து முட்புதர்கள் வளர்ந்த நிலையில் உள்ளது. இதனால் நவீன சுகாதார வளாகம் இருந்தும் மக்கள் திறந்தவெளியை கழிப்பறையாக மீண்டும் பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் செல்வம்: நவீன சுகாதார வளாகம் பல லட்சம் நிதியில் செலவழித்து கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராமலேயே வீணாகி கிடக்கிறது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகி கிடக்கிறது. மாவட்ட நிர்வாகம் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ