உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருத்தங்கலில் மராமத்து பணி முடிந்தும் பயன்பாடில்லாத சுகாதார வளாகம்

திருத்தங்கலில் மராமத்து பணி முடிந்தும் பயன்பாடில்லாத சுகாதார வளாகம்

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் சத்யா நகரில் மராமத்து பணிகள் முடிந்தும் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராததால் 4 வார்டு பெண்கள் சிரமப்படுகின்றனர்.திருத்தங்கல் சத்யா நகரில் 18, 19, 20, 21 ஆகிய வார்டுகளுக்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில், நாளடைவில் சுகாதார வளாகம் சேதம் அடைந்து பயன்பாட்டில் இல்லை. இதனால் ஆண்கள் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நான்கு மாதங்களுக்கு முன்பு சுகாதார வளாகத்தில் மராமத்து பணிகள் நடத்தப்பட்டது.ஒரு மாதத்திற்கு முன்பு பணிகள் முழுமையாக முடிவடைந்தது. ஆனாலும் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் நான்கு வார்டு பகுதி ஆண்கள், பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சுகாதார வளாகத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி