உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  உண்ணாவிரத போராட்டம்

 உண்ணாவிரத போராட்டம்

சாத்துார்: சாத்துார் நத்தத்து பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. 1995 ஆண்டு மே 26 வெளியிட்ட அரசுகள் என் 5ன்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் மேலமடை வருவாய் கிராமம் சர்வே எண் 933/2அமைந்துள்ள மாரியம்மன் கோயில் நத்தத்துப்பட்டி ஊராட்சியில் தான் உள்ளது என மாவட்ட கலெக்டர் 2025 அக். 10ல் வெளியிட்ட உத்தரவை அரசிதழில் வெளியிட வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் இசக்கி ராஜா தேவர் தலைமை வகித்தார்.கிராம மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை