உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கில் ஸ்ரீவி., நீதிமன்றத்தில் ஐ.ஜி., சாட்சியம்

பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கில் ஸ்ரீவி., நீதிமன்றத்தில் ஐ.ஜி., சாட்சியம்

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லுாரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லுாரி மாணவிகளிடம் அலைபேசியில் தவறாக வழி நடத்தும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐ.ஜி. ராஜேஸ்வரி நேற்று சாட்சியமளித்தார்.2018ல் கல்லுாரி மாணவிகளிடம் தவறாக வழி நடத்தும் வகையில் அலைபேசியில் பேசியதாக நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு அப்போதைய எஸ்.பி.யும், தற்போதைய தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐ.ஜி.யுமான ராஜேஸ்வரி விசாரணை நடத்தினார். ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். பின்னர் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது.பெரும்பாலான சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில், விசாரணை அதிகாரியான ஐ.ஜி. ராஜேஸ்வரி நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.நீதிபதி பகவதி அம்மாள் முன்னிலையில் காலை 11:00 மணி முதல் மதியம் 1:45 மணி வரையிலும், உணவு இடைவெளிக்குப் பிறகு 2:45 மணி முதல் 3:45 மணி வரையிலும் சாட்சியமளித்தார்.அவரிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சுரேஷ் நெப்போலியன், மாரியப்பன் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்தனர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் ஆஜரானார். விசாரணையை மார்ச் 15 க்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை