பட்டாசு கழிவு விபத்தில் காயமடைந்தவர் பலி
சாத்துார், : சாத்துார் தாயில்பட்டியில் பட்டாசு கழிவை எரித்த போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.தாயில்பட்டி சேதுராமலிங்கபுரத்தில் உள்ள ஸ்டான்டர்ட் பயர் ஒர்க்ஸில் செப். 18ல் மாலை 6:30 மணிக்கு பட்டாசு கழிவான மணி மருந்தை காட்டுப் பகுதியில் கொட்டி அழிக்கும் பணியில் துரைசாமிபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் 44, பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பீடி பற்ற வைத்து விட்டு தீக்குச்சியை அணைக்காமல் கழிவு மருந்து மீது போட்டதில் வெடி விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று மதியம் 1:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.