உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நவ.21க்குள் உள்ளகக் குழு அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தல்

 நவ.21க்குள் உள்ளகக் குழு அறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு உள்ளகக் குழு அமைத்து நவ. 21க்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: அரசு, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லுாரிகள், பயிற்சி மையங்கள் என அனைத்து இடங்களிலும் பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தலை தடுக்க உள்ளகக் குழு அமைக்க வேண்டும். அதன் விவரத்தை www.tnswd-poshicc.tn.gov.inஎன்ற இணையதள முகப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உள்ளகக் குழுவில் ஒரு பெண் மூத்த அலுவலர் அல்லது பெண் ஊழியரே தலைவராக இருத்தல் வேண்டும். குறைந்தது 2 உறுப்பினர்கள் பெண்களின் நலனுக்காக பணியாற்றும் ஆர்வமிக்க நபர்களாக பணியாளர்களில் இருந்து நியமிக்க வேண்டும். ஒரு உறுப்பினர் பெண்களுக்கான குற்றங்களை தடுக்கும் பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒருவராக இருத்தல் வேண்டும். உள்ளகக் குழுவில் 50 சதவீதம் பெண்கள் இருத்தல் வேண்டும். உள்ளக குழு அமைக்கப்படாத இடங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும், மேலும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களின் மீது எடுக்கப்படும் பரிந்துரைகளில் நடவடிக்கை எடுக்காமலும், கலெக்டருக்கு ஆண்டறிக்கை சமர்பிக்காமலும் இருந்தாலும் அபராதம் விதிக்கப்படும். அனைத்து இடங்களிலும் உள்ளகக் குழு அமைத்து நவ. 21க்குள் அதற்கான அறிக்கையை வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி