முன் மாதிரியான சேவை விருதுக்கு அழைப்பு
விருதுநகர்:விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் முன் மாதிரியான சேவை விருது' பெற தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான சான்றுகளின் நகல்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, புதிய கலெக்டர் அலுவலகம், விருதுநகர் - 626 002 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ ஜூலை 31 மாலை 5:30 மணிக்குள் கிடைக்கும் படி அனுப்ப வேண்டும் என கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.