மேலும் செய்திகள்
பெண் குழந்தைகள் விருது அறிவிப்பு
27-Aug-2025
கலெக்டர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த, 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தகுதிகளின் அடிப்படையில், தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜன.24) பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இவ்விருதிற்கு 13 ---- 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் http://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் நவ. 30க்குள் விண்ணப்பிக்கலாம். அசல் கருத்துருவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம், என்றார்.
27-Aug-2025