உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தனியார் நிறுவனங்களில் திருக்குறள் எழுத அழைப்பு

தனியார் நிறுவனங்களில் திருக்குறள் எழுத அழைப்பு

விருதுநகர்: மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தி செய்திக்குறிப்பு: திருக்குறளும் உரையும் அரசு அலுவலங்களில் எழுதப்படுவது போல தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு ஊக்குவிக்க உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.திருவள்ளுவரின் திருக்குறளை தினம் ஒரு குறள் என்ற அடிப்படையில் பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் அனைத்து தொழிலாளர்களும் அறியும் வகையில் காட்சிப்படுத்த அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலை உரிமையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு செய்யும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளை ஊக்குவிக்க தொழில் நல்லுறவு பரிசுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும் போது சிறப்பு மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !