உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரணி -- திருச்சுழி மினி பஸ் நிறுத்தம்

கல்லுாரணி -- திருச்சுழி மினி பஸ் நிறுத்தம்

திருச்சுழி: கல்லுாரணியில் இருந்து திருச்சுழிக்கு சென்று வந்த மினி பஸ் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியிலிருந்து மேலகுருணை குளம், கீழகுருணை குளம், மீனாட்சிபுரம், ராமசாமிபட்டி, தமிழ்பாடி வழியாக திருச்சுழிக்கு மினி பஸ் வந்து சென்றது. இந்த மார்க்கத்தில் காலையில் மட்டும் அரசு டவுன் பஸ் 1 முறை வந்து செல்லும். மினிபஸ் பல டிரிப்புகள் வந்து செல்வதால் மக்களுக்கு வசதியாக இருந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களாக மினி பஸ் வருவது இல்லை. இதனால் கல்லூரணிக்கும், திருச்சுழிக்கும் செல்ல முடியாமல் இடைபட்ட கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். மெயின் ரோட்டிற்கு 2 கி.மீ., தூரம் நடந்து வந்து தான் பஸ் ஏற வேண்டியுள்ளது.கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் திருச்சுழி - கல்லூரணி மார்க்கமாக மினி பஸ்சை மீண்டும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை