உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கனவு இல்ல திட்டத்தின் ஒதுக்கீட்டு தொகையை எப்ப கொடுப்பீங்க! அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்வதில் சிக்கல்

கனவு இல்ல திட்டத்தின் ஒதுக்கீட்டு தொகையை எப்ப கொடுப்பீங்க! அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்வதில் சிக்கல்

ராஜபாளையம், மாவட்டத்தில் 'கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில்'பயனாளர்களுக்கு நிலுவைத் தொகைகளை அதிகாரிகள் ஆய்வுமுடித்தும் தாமதப்படுத்தி வருவதால் பயனாளிகள் அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்வதில் சிக்கலுக்கு உள்ளாகின்றனர்.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் குடிசைகளை அகற்றி கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு இலவச கான்கிரீட் வீடு கட்டு வதற்கு வீடற்ற பயனாளி ஒருவருக்கு ரூ. 3.50 லட்சம் வரை நிதி உதவி அளிக்கப் படுகிறது. வீடுகளின் பேஸ்மென்ட், கான்கிரீட் தளம், கடைசி கட்டம் என மூன்று தவணைகளாக பயனாளி களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகிறது. மாவட்டத்தில் விருது நகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் இத்திட்டத்தின் கீழ் ஆயிரத்திற்கும் அதிக மானோர் இந்த ஆண்டு ஒதுக்கீடு, ஒப்புதல் பெற்று பல கட்டங்களாக பணிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் பெரும்பாலானோர் மூன்றாம் கட்ட பணிகளை முடித்து தவணை தொகையை பெறுவதற்கான நடை முறைகளை முடித்து அதிகாரிகள் பார்வையிட்டு சென்றும் தற்போது வரை வங்கி கணக்கில் நிலுவைத் தொகை வந்துசேரவில்லை. வீடுகளைக் கட்டி முடித்த பின் வீடுகளின் முகப்பில் அரசின் முத்திரை, வண்ண குறியீடு பெயிண்ட், கழிப்பறை முழுமை பெற்று திட்ட பயனாளியின் பெயர், தொகை எழுதப்பட்டு வீட்டின் இரண்டு பக்கமும் மரக்கன்றுகளை நட்டு முழுமைப்படுத்தி இருக்க வேண்டும். இவற்றை அந்தந்த பகுதி பி.டி.ஓ., நேரடியாக சென்று ஆய்வு செய்து படம் எடுத்து இதற்கான ஆப்--ல் பதிவேற்றம் செய்த பின் கலெக்டர், திட்ட அதிகாரிகள் பணத்தை செய லாளர்களின் கணக்குகளில் வெளியிடுவார். ராஜபாளைம் ஒன்றி யத்தில் இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு பெற்ற 154 நபர்களில் தற்போது வரை 45 பேர் முழுமையான பணிகள் முடித்தும் பெரும்பாலான வீடுகளை பி.டி.ஓ., பார்வையிட்டு முடித்துள்ளார். ஒரு மாதங்களைக் கடந்தும் பணி பளுவை காரணம் காட்டி நிலுவைத் தொகை வரவு வைக்கப்படாததால் பயனாளர்கள் தவிப்பில் உள்ளனர். ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், எஸ்.ஐ. ஆர்., பதிவு போன்ற பணிகள் தாமதத்திற்கு காரணமாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது தொடர் விடுமுறை, தேர்தல் கால அறிவிப்புகளை காரணம் காட்டி மேலும் தாமதப் படுத்தப்படுமோ என்ற அச்சத்தின் உள்ளனர். ஏற்கனவே முன் பணமாக வெளியில் கடன் வாங்கி பணிகள் முடித்து உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ