உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கம்

விழிப்புணர்வு பிரசார வாகனம் துவக்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்து தமிழ் சுடர் ஜோதியை வழங்கினார்.கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் ஜன. 19 முதல் 31 வரை நடக்க உள்ளது. இது தொடர்பாக வாகனங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்திற்கு வந்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த அனுப்பப்பட்டுள்ளது.போலீஸ்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலம் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரமணிமாறன், ஆர்.டி.ஓ., சிவக்குமார், உடற்கல்வி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்