மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா
11-Sep-2025
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பிள்ளையார் நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது; போதைப் பொருளை பயன்படுத்துவது, உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது குற்றங்களாகும். போதை பொருள் நமது வலிமையை அதிகரிக்காது. பலவீனப்படுத்தும். போதைப் பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்கள் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். விழாவில் நீதிபதிகள் வீரணன், அகிலாதேவி, மாவட்ட கல்வி அலுவலர் சுரேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேதுராமன் பேசினர். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.
11-Sep-2025