மேலும் செய்திகள்
குழந்தைகளுக்கான நுாலகம் நடத்தும் பெண் பொறியாளர்
13-Oct-2025
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் செல்வதற்கு வழியே இல்லாத இடத்தில் நுாலகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருவேங்கடம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் நுாலகம் கட்டப்பட்டது. ஆனால் இந்த நுாலகத்திற்கு செல்வதற்கு வழி இல்லை. நுாலகத்தின் முன்புறம் ஓடை செல்கிறது. கழிவுநீர் செல்லும் இதனைத் தாண்டி செல்ல முடியாது. நுாலகம் கட்டப்பட்டும் வீணாக கிடக்கிறது. இதனால் நுாலகம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதம் அடையவும் வாய்ப்பு உள்ளது. நுாலகம் செயல்படாததால் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள், இளைஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே நுாலகம் செல்வதற்கு வழி ஏற்படுத்தி அங்கு புத்தகங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
13-Oct-2025