உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை நிறைவு

விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் 2023 நவ. 24 கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 48 நாட்கள் நடந்த மண்டல பூஜைகள் நேற்று நடந்த யாகசாலை பூஜைகளுடன் நிறைவடைந்தது.இந்த விழாவில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பராசக்தி மாரியம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. மேலும் காலை 9:05 மணிக்கு துவங்கிய யாகசாலை பூஜைகள் மதியம் 12:30 மணிக்கு நிறைவடைந்தது. பூஜைக்கு பின் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு காலை முதல் மதியம் வரை பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானம் தலைவர் தங்கராஜன், உப தலைவர் சுந்தரவேல், செயலாளர் கனகவேல், இணைச் செயலாளர் ஆனந்த வேல், பொருளாளர் பொன்னப்பன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை