உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துார் நான்கு வழிச்சாலையில் குப்பை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

சாத்துார் நான்கு வழிச்சாலையில் குப்பை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

சாத்துார், : சாத்துார் - கோவில்பட்டி நான்கு வழி சாலையோரம் குப்பை கொட்டி தீ வைத்து எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.சாத்துார் அமீர் பாளையம், புதுப்பாளையம், நள்ளி, தோட்டிலோவன்பட்டி விலக்கு, உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் சாலை ஓரங்களில் குப்பை கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன.இதன் காரணமாக எழும் புகை வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுத்துவதோடு விபத்துக்கள் ஏற்படவும் காரணமாக அமைந்து விடுகிறது.பெரும்பாலான ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. சாத்துார்- கோவில்பட்டி நான்கு வழி சாலை ஓரத்தில் உள்ள பல கிராமங்களில் இது போன்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. ஊராட்சி பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை எனபிரித்து வாங்குவது இல்லை.குப்பைகள் அனைத்தையும் ஒன்றாக சேகரித்து வந்து துப்புரவு பணியாளர்கள் காலியாக உள்ள இடங்களில் கொட்டி தீ வைத்து வருகின்றனர். பெரும்பாலும் சாலை ஓரங்களிலேயே குப்பையை கொட்டி தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதோடு இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உருவாகி வருகிறது.முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினால் இதுபோன்ற செயல்கள் நடைபெறாது எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ