உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எம்.சாண்ட் விலை அதிகரிப்பு: லாரிகள் வேலை நிறுத்தம்

எம்.சாண்ட் விலை அதிகரிப்பு: லாரிகள் வேலை நிறுத்தம்

சிவகாசி: எம்.சாண்ட் விலை யூனிட்டுக்கு ரூ.2 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து சிவகாசியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிப்பர் லாரி மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி பகுதியில் 40 க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கி வருகிறது. இங்கிருந்து கட்டுமான பணிக்கு தேவையான உடைகல், ஜல்லி, கிராவல், கிரஷர் துாசி எம்.சாண்ட் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு குவாரி குத்தகைதாரர்கள் ,கிரஷர் உரிமையாளர் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் ஜல்லி , எம்.சாண்ட் உற்பத்தியின் போது 20 சதவீதம் கழிவு வருவதாலும், தற்போது ஒரு ஏக்கர் ரூ.3 லட்சமாக இருந்த மதிப்பு தற்போது ரூ.30 லட்சமாக உயர்ந்துவிட்டது.மேலும் 2023 ஆக. 22 ,2025 பிப். 20 ல் தமிழக அரசு உயர்த்தியஅதிகப்படியான கட்டணம், வரிகளை குவாரி உரிமையாளர்கள் செலுத்த வேண்டியுள்ளதால் ஏப். 15 முதல் உடைகல், கிராவல், ஜல்லி, எம்.சாண்ட் விலை உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக எம்.சாண்ட் விலை யூனிட்டுக்கு ரூ.2 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டுநர்களுக்கு குவாரி உரிமையாளர்கள் வழங்கும் படி தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. அதிகபட்ச விலை உயர்வை கண்டித்து சிவகாசி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கட்டுமான பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சிவகாசி லாரி உரிமையாளர்கள் சங்கம் செயலாளர் மலைச்சாமி கூறுகையில்: சிவகாசி பகுதியில் உள்ள 40 கல்குவாரிகளில் பொருட்களை ஏற்றிச் செல்லும் பணியில் லாரி, டிப்பர், டிராக்டர் என ஆயிரம் வாகனங்கள் ஈடுபட்டுள்ளன. எம்.சாண்ட் விலை யூனிட்டுக்கு ரூ.2 ஆயிரம் உயர்த்தப்பப்பட்டும், டிரைவர்களுக்கான படி நிறுத்தப்பட்டுள்ளது.விலை உயர்வால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. அதிகப்படியான விலை உயர்வை கண்டித்து சிவகாசியில் ஆயிரம் வாகனங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக மாவட்ட மற்றும் மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி