தேசிய அஞ்சல் வார கொண்டாட்டம்
விருதுநகர்: முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசீலா செய்திக்குறிப்பு:மக்கள், வணிகர்களின் அன்றாட வாழ்வில் அஞ்சல் துறையின் பங்கு, நாடுகளின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அஞ்சல் தினத்தின் நோக்கம்.தற்போது அஞ்சல் சேவையின் பங்கு, செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அஞ்சல் வாரத்தை கொண்டாடுகிறது. இன்று(அக். 7) அஞ்சல்கள் பார்சல்கள் தினம், அக். 8ல் தபால் தலை தினம், 9ல் உலக அஞ்சல் தினம், 10ல் நலிவுற்றோர் தினம், 11ல் நிதி வலுவூட்டல் தினம் என கொண்டாடப்படுகிறது.இந்த தேசிய அஞ்சல் வாரத்தில் அஞ்சலகங்களில் வழங்கப்படும் அனைத்து விதமான சேவைகள் பற்றி அறிந்து பயன்பெறலாம், என்றார்.