வாசகர்கள் கருத்துகள் ( 2 )
Congratulations and clean
வாழ்த்துக்கள்சுத்தம் சுகாதார முறையில் இருந்தால் சிறப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையை எட்டியுள்ளதால் ஏப்ரல் 15க்குள் திறக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கவும், அடுத்த 50 ஆண்டுகளில் நகரின் வளர்ச்சியையும், மக்கள் தொகை அதிகரிப்பையும் கணக்கிட்டு புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டு தற்போது சிவகாசி ரோட்டில் அச்சங்குளம் கிராமத்திற்கு செல்லும் பாதையில் 4 ஏக்கர் நிலத்தில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.13 கோடி செலவில் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் கடந்த பல மாதங்களாக நடந்து வருகிறது. இங்கு 30 பஸ்கள் நிற்கும் வசதி, 2 பெரிய ஓட்டல்கள், 67 கடைகள், 100 டூவீலர்கள், 50 கார்கள் நிறுத்துமிடம், 4 இடங்களில் சுகாதார வளாகம், போதிய குடிநீர், இருக்கை வசதிகள் செய்யப்பட உள்ளது.தற்போது பஸ் ஸ்டாண்டில் கடைகள் கட்டப்பட்டு, விரைவில் டெண்டர் விடுவதற்குரிய நிலையில் தயாராகி வருகிறது. இன்னும் தரைத்தளத்தில் ரோடுகள் அமைக்கப்பட வேலைகள் உள்ளது. அதுவும் மார்ச் 30க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் கூறியதாவது: புதிய பஸ் ஸ்டாண்டில் தற்போது கடைகள் கட்டப்பட்டு கதவுகள் பொருத்தி, மின் இணைப்புகளும் கொடுக்கப்பட உள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் முடிந்து ஏப்ரல் 15க்குள் புதிய பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.
Congratulations and clean
வாழ்த்துக்கள்சுத்தம் சுகாதார முறையில் இருந்தால் சிறப்பு