வாசகர்கள் கருத்துகள் ( 1 )
என்னய்யா ஊர் பேரு இது ... வேற நல்ல பேரு கிடைக்கலையா ?
காரியாபட்டி : மானாவாரி பயிராக நித்யகல்யாணி சாகுபடி செய்து, அதிக லாபம் சம்பாதித்து, இன்ஜினியர் விவசாயி சாதித்துள்ளார். காரியாபட்டி மேலத்துலுக்கன்குளத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் 41. தனியார் நிறுவன இன்ஜினியர். விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டு 7 ஆண்டுகளாக தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவர் 35 ஏக்கர் பரப்பில் நித்ய கல்யாணி சாகுபடி செய்ய அருப்புக்கோட்டை வேளாண் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெற்றார். கடும் வறட்சியை தாங்கி, குறைந்த அளவு நீர் தேவையில் விளையக்கூடிய நித்ய கல்யாணியை பயிரிட்டார். நல்ல விளைச்சல் ஏற்பட்டு அறுவடை செய்து வருகிறார். குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதித்து சாதித்துள்ளார். கிருஷ்ணகுமார் கூறியதாவது: ஏக்கருக்கு ஒரு கிலோ விதை போதுமானது. 35 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. இதற்கு ஆன செலவு ரூ. 80 ஆயிரம். ஒரு ஆண்டில் ரூ. 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம். நல்ல கிராக்கி இருக்கிறது. இதன் ஆயுட்காலம் ஒரு ஆண்டு. 2, 3 முறை பலன் கொடுக்கும். மற்ற விவசாயங்கள் 6 மாதத்தில் முடிந்துவிடும். இது ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடியது.இதனை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு செல்கின்றனர். மற்ற விவசாயிகளும் நித்ய கல்யாணி பயிரிட்டு அதிகம் லாபம் சம்பாதிக்கலாம், என்றார்.
என்னய்யா ஊர் பேரு இது ... வேற நல்ல பேரு கிடைக்கலையா ?