மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் இருக்கைகள் மாயம்: பயணிகள் சிரமம்
13-Sep-2025
ராஜபாளையம்:ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செயல்படாமல் உள்ளதால் மக்கள் தாகத்திற்கு தவித்து வருகின்றனர். ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அமைத்ததில் இருந்து தற்போது வரை முழுமையாக செயல்பாட்டில் இருந்து வரும் பஸ் ஸ்டாண்ட் . தொடக்கத்தில் ஏ கிரேடு சான்றிதழ் பெற்று அதற்கு ஏற்ப பயணிகளுக்கு தேவையான காத்திருப்பு அறை, பாதுகாப்பு அறை, சுகாதாரமான குடிநீர் வசதிகளுடன் இருந்து வந்தது. இந் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பல வருடங்களாக செயல்படாமல் உள்ளது. தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஓரளவு வசதி படைத்தவர்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கின்றனர். இதுகுறித்து ராமசாமி: பொதுமக்களின் அடிப்படை தேவைக்கென குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பஸ் ஸ்டாண்டில் இரண்டு பக்கமும் அமைக்கப்பட்டு இதற்கான குழாய்கள் செயல்படாமல் இருந்து வருகிறது. மக்கள் வேறு வழியின்றி விலை கொடுத்து வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
13-Sep-2025