உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்--: தேவை பராமரிப்பு

செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்--: தேவை பராமரிப்பு

ராஜபாளையம் : ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதி பொது இடங்களில் மக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிக்கப்படும் இயந்திரங்கள் செயல்படாமல் உள்ளதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர். ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இரண்டு பக்கமும் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம், செட்டியார்பட்டி பேரூராட்சி எதிரே அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரமும் பழுதாகி உள்ளது. தளவாய்புரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள குடிநீர் தொட்டியிலும் தண்ணீர் நிரப்புவதில்லை. கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொது இடங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் இலவச குடிநீர் பெறுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ