உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

திருச்சுழி: திருச்சுழி ரமண மந்திராலயத்தில் நூல் வெளியீட்டு விழா நடந்தது.திருச்சுழியின் வரலாறு ,அதன் பெருமை பற்றி விளக்கும் ஸ்ரீ மௌனி சாது பூஜ்ய சத்யானந்த மஹராஜ் தமிழில் எழுதிய திருச்சுழி மகாத்மியம் என்ற நூலை ராம சாதுதாசன் பிரம்மஞானி ராதாகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா திருச்சுழி அருகே பள்ளிமடத்தில் ரமண மந்திராலயத்தில் யுனிராம் டிரஸ்ட் சார்பில் நடந்தது.ராமநாதபுரம் சமஸ்தானம் ராணி ராஜேஸ்வரி நாச்சியார் கலந்துகொண்டு முதல் பிரதியை வெளியிட, தொழில் அதிபர் கண்ணன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது..நிகழ்ச்சியில் சுவாமி மங்களானந்த பாரதி, முன்னாள் எம்பி., சித்தன், முன்னாள் எம்எல்ஏ., ராம் பிரபு, தொழிலதிபர் சீனிவாச ராஜா கலந்து கொண்டனர். - - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை