உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இரண்டு கட்ட போராட்டம் செவிலியர்கள் முடிவு

இரண்டு கட்ட போராட்டம் செவிலியர்கள் முடிவு

விருதுநகர்:தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 5ல் கோரிக்கை கடித இயக்கம், அக்., 14ல் கலெக்டர்கள் மூலம் துறை செயலாளரிடம் முறையீடு செய்வது என இரண்டு கட்ட போராட்டத்தில் ஈடுபட எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள 1500 பணியிடங்களில் தொகுப்பூதிய செவிலியர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்து நியமிக்க வேண்டும். பணியில் இணைந்த நாள் முதல் காலமுறை ஊதியம், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.கருவூலம் மூலம் ஊதியம் பெறும் செவிலியர்களுக்கு ரூ. 18 ஆயிரமாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதன்படிகோரிக்கைகளை வலியுறுத்தி 2 கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என சங்க பொது செயலாளர் சுபின் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ