உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  அதிகாரிகள் அலட்சியத்தால் துார்வாரும் பணிகள் பாதிப்பு

 அதிகாரிகள் அலட்சியத்தால் துார்வாரும் பணிகள் பாதிப்பு

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி அலுவலக ரோட்டில் வாறுகால்களை துார்வாரும் பணிகள் அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன் அப்பகுதி கடை களுக்கு முன்புள்ள படிகள் வாறுகால்களை துார் வாரும் பணிக்காக உடைக்கப்பட்டன. சிறிது நேரம் மட்டும் கழிவு மண்ணை அள்ளிய துாய்மைப் பணியாளர்கள் பின்னர் அப் படியே விட்டுச் சென்றனர். துார்வாரும் பணிகள் அதன்பின் நடக்காததால் கடைக்காரர்கள் தாங்களாகவே படிகளை சீரமைத்தனர். கண்காணிக்க அதிகாரிகள் இல்லாததால் துார் வாரும் பணி கண்துடைப்பு வேலையானது. மழைக் காலங்களில் ரோட்டில் சாக்கடை பெருகும் சூழல் உருவாகும். துார்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்'' என ம.நீ.ம., மாவட்ட செயலாளர் காளிதாஸ் வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ