உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் மோதி ஒருவர் பலி தற்காலிக டிரைவர் கைது

பஸ் மோதி ஒருவர் பலி தற்காலிக டிரைவர் கைது

விருதுநகர்: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் தனியார் நிறுவன ஊழியர் மஸ்தான் 42. இவர் விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகரில் இருந்து கன்னிசேரி செல்லும் ரோட்டில் நண்பருடன் நடந்து சென்றார்.அப்போது விருதுநகரில் இருந்து முதலிப்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ் அவருக்குப் பின்னால் வேகமாக வந்து மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் ஒலி எழுப்பாமல் அதிவேகமாக வந்ததால் விபத்து நேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுனராக பணிபுரியும் அழகாபுரியை சேர்ந்த ராஜசேகர் 53, என்பவரை கைது செய்து வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை