அரசு மருத்துவமனையில் மாதம் ஒரு ஆர்.எம்.ஓ, கண்காணிப்பாளர் நிர்வாக பணிகள் பாதிப்பு
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் ஒருநிலைய மருத்துவ அலுவலர், கண்காணிப்பாளர் பொறுப்பில் இருப்பதால் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகப் பணிகளை கண்காணிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரி, மருத்துவமனையில் முதல்வராக இருந்த சீதாலட்சுமி கடந்த மாதம் பணி நிறைவு பெற்றார். அதற்கு முன்பே நிலைய மருத்துவ அலுவலர் பணி நிறைவு பெற்றார். மேலும்உதவி நிலைய மருத்துவர் பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதலில் சென்றார்.தற்போதுமருத்துவமனை முதல்வர், நிலைய மருத்துவ அலுவலர், உதவி நிலைய மருத்துவ அலுவலர், கண்காணிப்பாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது.இந்நிலையில் புதிய பணியிடங்கள் நிரப்பும் வரை பொறுப்பு பதவி வழங்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் மருத்துவனை முதல்வர், உதவி நிலைய மருத்துவர்நியமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் நிலைய மருத்துவ அலுவலர், கண்காணிப்பாளர் பணியிடங்கள்பொறுப்பு பதவியில் நியமிக்கப்படாமல் ஒவ்வொரு மாதமும் ஒருவர் எனசுழற்சி முறையில் பணிகளை செய்து வருகின்றனர்.மருத்துவமனை நிர்வாகம், வசதிகள்,மருந்து, மாத்திரைஎன அனைத்து நடவடிக்கைகளையும்கண்காணித்து முதல்வருக்கு தெரிவித்து பணிகள் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டிய முக்கிய பணிக்கு பொறுப்பு பதவிகள் இல்லாமல் சுழற்சி முறையை பின்பற்றும் நடைமுறைகேள்வியை எழுப்பியுள்ளது.இதனால் மருத்துவமனைக்குதேவையான ஸ்பெஷாலிட்டி மருந்துகள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில்துாய்மை, பராமரிப்பு இன்மை, ஒப்பந்த பணியாளர்கள் கையூட்டு, பணியாளர்கள் பிரச்னை ஆகியவை அதிகரித்துள்ளது.மருத்துவமனையில்உரிய முறையில் சிகிச்சை அளிப்பதால்நாளுக்கு நாள்நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆனால்முக்கிய பணியிடங்கள் நிரப்பும் வரை பொறுப்பு பதவிகளில் அதிகாரிகளை பணி அமர்த்தினால்பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.