உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டோரத்தில் திறந்தவெளி கிணறு வாகன ஓட்டிகள் அச்சம்

ரோட்டோரத்தில் திறந்தவெளி கிணறு வாகன ஓட்டிகள் அச்சம்

சிவகாசி, : சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் இருந்து எம்.மேட்டுப்பட்டி செல்லும் ரோட்டின் ஒரத்தில் இருக்கும் திறந்து வெளி கிணறால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.சிவகாசி அருகே எம்.புதுப்பேட்டையில் இருந்து மேட்டுப்பட்டி செல்லும் ரோட்டில் விவசாய நிலங்கள் உள்ளன.- இங்கு சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இப்ப பயிர்களில் பெரும்பான்மையானவை கிணற்று பாசனத்தில் விளைவிக்கப்படுகிறது. இதற்காக விவசாய நிலங்களில் கிணறுகள் உள்ளன. இதில் ஒரு சில கிணறுகள் ரோட்டின் ஓரத்திலேயே திறந்த வெளியில் உள்ளது.பயன்பாட்டில் உள்ள இந்த கிணறுகளில் எப்பொழுதும் தண்ணீர் இருக்கும். ரோட்டில் மிக அருகிலேயே திறந்த நிலையில் கிணறு இருப்பதால் டூவீலரில் செல்பவர்கள் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். தவிர இருளில் செல்லும் போது கிணறு இருப்பதே தெரியவில்லை. கொஞ்சம் அசந்தாலும் கிணற்றில் விழுந்து விட வாய்ப்புள்ளது.இதனால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள திறந்த வெளி கிணறுகளுக்கு உடனடியாக தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ