உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாளையம்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

பாளையம்பட்டி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சியை அருப்புகோட்டைநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.பாலையம்பட்டி ஊராட்சியின் ஒரு சில பகுதிகளை அருப்புக்கோட்டை நகராட்சியுடன் இணைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மக்கள் சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நேற்று முன்தினம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள், சமுதாய பெரியோர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்க அமைப்பினர், கட்டட தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவ்வாறு செய்தால் வரி பல மடங்கு உயரும், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் பாதிக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இழக்கக்கூடும் அதனால் நகராட்சியுடன் இணைப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஜன. 9ம் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.- - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ