பங்குனி பொங்கல் விழா
சாத்துார் : சாத்துார் மாரியம்மன் காளியம்மன் கோயிலில் நேற்று பங்குனி பொங்கல் விழா நடந்தது.சாத்துார் மாரியம்மன், காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து பல்வேறு சமுதாய மண்டகப்படியார்கள் சார்பில் நாள்தோறும் அம்மன் ரிஷபம், சப்பரம், பூப்பல்லாக்கு சிம்மம் ஆகிய வாகனங்களில் நகர்வலம் வந்தார்.முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று இரவு நடந்தது. சாத்துார், சுற்றுக் கிராமங்களை சேர்ந்த பலர் அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். முன்னதாக ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை 1:30 மணிக்கு காளியம்மன் கோயில் முன்பு பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் பலர் கலந்து கொண்டனர். நகராட்சி சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. விழாக் கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.